பாண்டிய நெடுங்காப்பியம் - வரலாற்றுப் பின்னணி - ஒரு பதிவு
குறிப்பிடத்தக்க சமீத்திய சரித்திர நாவலின் ஆசிரியை திருமதி ஸ்ரீஜா வெங்கடேஷ் பங்கு பெற்ற நமது எட்டாவது நிகழ்வு 21.11.2015 அன்று பனுவல் புத்தக நிலைய அரங்கில் நிறைவேறியது.
திருமதி விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தார்.
இம்மாதக் இம்மாதக் கதையினை கீதா அவர்கள் வாசித்தார்கள்
.
இம்மாதக் கவிதை அளித்தவர் சாந்தி
விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் எழுத்தாளர் அறிமுகம் வாசித்தார்
சுருக்கமாக எனினும் ஆழமான தன் உரையில் ஸ்ரீஜா வெங்கடேஷ் தனது அனுபவங்களையும், பாண்டிய நெடுங்காப்பியம் உருவாகிய கதையினையும் அதில் கிடைத்த அனுபவங்களையும் சுவையான செய்திகளையும் பகிர்ந்துகொண்டார்
அமைப்பாளர்கள் சார்பில் தனது கருத்துக்களை கிருபானந்தன் அளித்தார்
பங்கேற்ற சரித்திர ஆர்வத்தினை பிரதிபலித்த பார்வையாளர்களின் கேள்விகளும், ஸ்ரீஜா அவர்களின் களப்பணி அனுபவம் பின்னணியில் மறுமொழியும் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக விளங்கியது
.சுபா சுரேஷ் நன்றி நவில ஒரு இனிய நிகழ்வு நிறைவுபெற்றது
குவிகம் இலக்கிய வாசலின் ஏழாவது நிகழ்வாக "அசோகமித்திரன் - படைப்புகள்" அக்டோபர் 24 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையம் அரங்கில் நடைபெற்றது
திரு கிருபானந்தன் அவர்கள் எல்லோரையும் வரவேற்றார்
நிகழ்ச்சியின் முதலில் திருமதி சுபா சுரேஷ் கவிதை வாசித்தளித்தார். அதன் ஒலி வடிவம் :-
இம்மாத சிறுகதையை அளித்தவர் Dr. J பாஸ்கரன் அவர்கள் அதன் ஒளி வடிவம்.
இந்நிகழ்வின் சிறப்பு உரையை திரு சாருநிவேதிதா அவர்கள் வழங்கினார்.
அதன் ஒளி வடிவம் (நன்றி ஸ்ருதிடிவி)
அசோகமித்திரன் படைப்புகளில் தங்கள் அனுபவத்தை பகிந்து கொண்டவர்கள்
குவிகம் இலக்கிய வாசலின் ஐந்தாம் நிகழ்வாக கவிப்பேரொளி திரு. நீரை அத்திப்பூ அவர்களின் முன்னிலையில் 22.08.2015 சனிக்கிழமை மாலை டாக்டர் JG கண்ணப்பன் வாசுகி அரங்கத்தில் நடைபெற்றது
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை திரு தரும. ராஜேந்திரன் வரவேற்றார், முன்னிலை வகிக்கும் கவிப்பேரொளி திரு நீரை அத்திப்பூ அவர்களின் அறிமுகக் குறிப்பையும் வாசித்தார்.
நிகழ்ச்சியை தொடங்கிவைத்து உரையாற்றிய திரு அத்திப்பூ அவர்கள் ஆற்றிய உரையின் ஒலிவடிவம்
தொடர்ந்து கவிதை வாசித்தவர்கள் (ஒலிவடிவத்துடன்)
திருமதி தயாநி தாயுமானவன்
கவிஞர் ஆரா
திருமதி சுபா சுரேஷ்
திருமதி விஜயலக்ஷ்மி சுந்தரராஜன்
(திரு சுந்தரராஜன் அவர்களின் கவிதை)
திரு கு மா பா திருநாவுக்கரசு
(குரல் திரு கிருபானந்தன்)
திரு மயிலை வண்ணதாசன்
திரு கிருபானந்தன்
திரு தரும. ராஜேந்திரன்
திரு நீரை அத்திப்பூ அவர்களின் நிறையுரையின் ஒலிவடிவம்
திரு கிருபானந்தன் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது
இடம்: ஸ்ரீநிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் சாலை,
ஆழ்வார்பேட்டை, சென்னை 600018
நாள்: 18.07.2015 சனிக்கிழமை மாலை 6.15 – 8.00
கலந்துகொள்வோர் தங்கள் சிறுகதைகளை வாசித்து மகிழ்விக்கக் கோருகிறோம்.
பரிசுகளும் உண்டு.
நேரம் கருதி சிறுகதைகளை நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.
படிக்கப்படும் கதைகள் குவிகம் மின்னிதழில் பிரசுரிக்கப்படும்.
பின்னால் நடத்தத் திட்டமிட்டுவரும் சிறுகதைப் பட்டறைக்கு இது ஓர் முன்னோட்டம்.
கதைகள் வாசிக்க விரும்பும் அன்பர்கள் பெயர்களை ilakkiyavaasal@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9791069435 (கிருபானந்தன்) என்ற அலைபேசியில் பதிவு செய்துகொள்ளவும்.
குவிகம் இலக்கியவாசல் நான்காம் நிகழ்வு "சிறுகதை சிறுவிழா"'
சென்னை -ஆழ்வார்பேட்டை ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில்
18.07.2015 அன்று மாலை நடந்தது .தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாலை 6.15 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது .அனைவரையும் வரவேற்ற
திரு.கிருபானந்தன் நடுவர்களை மேடைக்கு அழைத்தார்
.
நவீன விருட்சம் என்னும் காலண்டு இதழை கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மிகுந்த முனைப்புடன் வெளியிட்டு வருபவரும், கணையாழி குறுநாவல் போட்டிகளில் பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவரும், விருட்சம் இலக்கிய சந்திப்பு என்னும் நிகழ்ச்சியின் அமைப்பளர்களில் ஒருவரும், பல முன்னணி எழுத்தாளர்களின் இனிய நண்பருமான - திரு அழகிய சிங்கர் அவர்கள்,
புகைப்படக் கலைஞரும், சிறுகதை, கவிதை தொகுப்புகள், வானொலி நிகழ்ச்சிகள் தவிர இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் உள்ளிட்ட இலக்கிய ஆளுமைகளை பேட்டிகள் கண்டு புகைப்படங்களுடன் அளித்தவரும், ஓவியர் கோபுலு, ஓவியர் நடனம் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவருமான – திரு, கிளிக் ரவி அவர்கள்,
பத்து சிறுகதை கவிதை தொகுப்புகள் தவிர அரசியல், அறிவியல், சுய முன்னேற்றம், ஆன்மிகம், கட்டுரைகள், கதைகள், கவிதைகள், சினிமா, நகைச்சுவை என பலதரப்பட்ட பதிவுகளை வலைப்பூவிலும் சுமார் நான்காயிரம் நண்பர்கள் கொண்ட முகநூலிலும் எழுதிவருபவரும் தினமலர் வாரமலர் பகுதியில் தொடர்ந்து எழுதிவருபவருமான திரு KG ஜவர்லால் அவர்கள்.
மூன்றாம் பரிசு பெற்றவர்கள் திரு
சரவணன் - திரு GB சதுர்புஜன்
மற்ற கதைகள்
முன்னமே பதிவு செய்ய இயலாவிட்டாலும் முனைவர் மாணிக்கம் பிச்சை அவர்களும் தனது கதையினை வாசித்தார்
அமைப்பாளர்கள் ஒருவரான திரு தர்ம.ராஜேந்திரன் தனது "1974" என்னும் கதையினை வாசித்தளித்தார்
அமைப்பாளர் திரு.சுந்தரராஜன் அவர்களின் "ஒரு தவறு செய்தால்.." என்னும் கதையினை அவரது துணைவியார் திருமதி விஜயலட்சுமி வாசித்தார்.
நடுவர்கள் உரை
நடுவர் ஜவர்லால் பேசுகையில் எல்லோரும் ஈடுபாட்டுடனும்
உற்சாகத்துடனும் பங்குபெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். இம்மாதிரியான முயற்சிகளில் பரிசு என்பது ஒரு பொருட்டல்ல என்றார். வேறுபட்ட நிலைகலன் கொண்ட சில கதைகளையும் குறிப்பிட்டு நிகழ்ச்சி நல்ல அனுபவமாக இருந்தது என்றார்.
நடுவர் கிளிக் ரவி தனது எழுத்து அனுபவங்களைக் குறிப்பிட்டுவிட்டு, சரித்திரக்கதை, கிராமக்கதை, வெளிநாட்டுக்கதை என பலகதைகள்
வந்துள்ளதைக் குறிப்பிட்டார். சில கதைகளையும் குறிப்பிட்டார். மேலும் இளைஞர்கள் இலக்கிய ஆர்வம் கொள்ள ஆவன செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நடுவர் அழகியசிங்கர் தமது உரையில் கதைகளில் கருப்பொருளும் தளமும் (அவர் உபயோகித்த சொல் IDEAS) பல தளங்களில் ஆச்சரியமாக இருந்தன என்றார். உதாரணத்திற்காக சில கதைகளையும் குறிப்பட்டார்.ஆனால், நல்ல தளத்திலிருந்த கதைகள் சில சரியாகச் சொல்லப்படவில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.
பத்திரிகைகளுக்கு கதைகள் வருவதில்லை எனவும் இந்நிகழ்ச்சியில் இந்த எண்ணிக்கையில் கதைகள் படிக்கப்படும் என்று தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனை சாதித்த அமைப்பாளர்களை வாழ்த்தி நன்றி கூறினார்.
நிறைவு
திரு தரும. ராஜேந்திரன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
ஒரு பின் குறிப்பு : நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரு. பிரபஞ்சன் அவர்கள் . படிக்கப்பட்ட இந்தக் கதைகளைக் கொண்டு ஒரு சிறுகதைப் பட்டறை முயற்சி செய்யலாம்.என்று ஒரு யோசனை தெரிவித்தார். இது பற்றிய தங்கள் கருத்தை கதை படித்த அன்பர்களும் மற்றவர்களும் தெரிவிக்கக் கோருகிறோம்.