Tuesday 12 April 2016

நாடகம் "நேற்று இன்று நாளை" - ஒரு பதிவு





இலக்கியவாசலின் பன்னிரண்டாவது  நிகழ்வு  வாசுகி கண்ணப்பன் அரங்கத்தில் 19 மார்ச் மாலையில் நடைபெற்றது.







தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு சுந்தரராஜன் வந்திருந்த முக்கிய விருந்தினர் திரு ஞாநி அவர்களையும் மற்றும் இலக்கிய ஆர்வலர்களையும் வரவேற்றார்.







திருமதி உமா பாலு அவர்கள் அவருக்கே உரிய முத்திரைக் கவிதைகளை எதார்த்தமாக வழங்கினார். கவிதைகள் சிறியதாக இருந்தாலும் காரமாக இருந்தன.






திரு ஈஸ்வர் தனது பரிசுபெற்ற ‘சிகாகோ மாம்பழம்’ என்ற கதையைப் படித்த விதம் மிக அருமையாக இருந்தது. பாத்திரங்கள் பேசுவதைப் போலவே அவர் படித்தது கேட்பவர் கருத்தை மிகவும் கவர்ந்தது.

சாகித்ய அகாதமியின் மொழியாக்க 2015 ஆவது ஆண்டுக்கான விருது பெறும் திருமதி கௌரி கிருபானந்தன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  குவிகம் இலக்கியவாசலும் அவரைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டது. 
ஓல்கா எழுதியவிமுக்தா”  என்ற கதைத் தொகுப்பின்  மீட்சி’ என்ற நூலுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.      திருமதி கௌரி கிருபானந்தன்  நம்  மேடையில் அந்தக் கதை எழுதிய  அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அதற்குப்  "பரிக்ஷா"  நாடக அமைப்பை கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாக நடத்தி நாடகக் கலைக்கு உயிர் கொடுத்து வரும் .  திரு ஞாநி அவர்கள் தமிழ் நாடகத்தில் வரலாற்றை அவருக்கே உரிய பாணியில் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பட்டி தொட்டியிலும் நடைபெற்ற நாடகங்கள்  எப்படிப் படிப்படியாகத் தேய்ந்து இன்று சென்னையில் மட்டும் எப்பொழுதாவது நடக்கும்  அபூர்வப் பொருளாக மாறிவிட்டது என்பதை விளக்கினார். 

ரசிகர்களுக்கும் நாடகக் குழுவிற்கும் இடையே பாலமாக இருக்கவேண்டிய சபா செயலர்கள்  இடைத் தரகர்களாக மாறி இந்த அழகான கலையை அழித்தது ஒரு காரணம். பள்ளிகளில் ஒரு காலத்தில் கோலோச்சிய  நாடக வடிவத்தை சுத்தமாக மறந்தது இந்தக் கலையின் வீழ்ச்சிக்கு இன்னொரு  காரணம். தொலைக்காட்சி "மெகா தொடர்"களை நாடகம் என்று ஒப்புக் கொள்ள மறுத்த திரு ஞாநி,   இந்த மீடியத்தின் அசுர வளர்ச்சி நாடக மன்றங்களின்  வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் என்று விளக்கினார்.  மேலும்  அரசாங்கமும்  குறைந்த கட்டணத்தில்  நாடக அரங்கங்களை அமைத்துக் கொடுத்திருந்தால் இந்தக் கலை நன்றாக வளர்ந்திருக்கும் என்றும் ஆதங்கத்துடன் கூறினார்.

ஞாநி அவர்களுடைய உரைக்குப் பிறகு இலக்கிய வாசலின் சிறப்பு அம்சமான கலந்துரையாடல் நடைபெற்றது .நேற்றைய இன்றைய நாளைய நாடகங்களைப் பற்றிய கேள்விகளுக்கு ஞாநி விளக்கமாக பதில் அளித்தார்.








கிருபானந்தன் , விழாத்  தலைவர் ஞாநி  அவர்களுக்கும்வந்திருந்த விருந்தினர்களுக்கும் மற்றும் விழா நடைபெற  உதவிய செந்தில்நாதன் அவர்களுக்கும் அரங்கம் தந்த வாசுகி கண்ணப்பன் அவர்களுக்கும் நன்றி கூற கூட்டம்  இனிதே முடிந்தது.


 * * * * * * * 

Wednesday 6 April 2016

நாடகம் - நேற்று இன்று நாளை - அறிவிப்பு


குவிகம் இலக்கிய வாசல் தனது வலைப்பூவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறது


பனிரெண்டாம் நிகழ்வு

நாடகங்கள்- நேற்று இன்று நாளை

சிறப்புரை:     திரு ஞானி
தொடர்ந்து கலந்துரையாடல்
    வழக்கம் போல் சிறுகதை  ஒன்றும் –  கவிதை ஒன்றும் படிக்கப்படும்
அனைவரும் வருக !
இடம்: J G கண்ணப்பன் வாசுகி அரங்கம், 68டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,(ஹோட்டல் பிரசிடென்ட் எதிரில்) சென்னை 600004      
சனிக்கிழமை 19 மார்ச் 2016மாலை 6.30 மணி