Thursday 31 December 2020

குவிகம் இலக்கிய விநாடி வினா




முதல் பரிசு Rs. 3000, 
இரண்டாம் பரிசு Rs. 2000 
 மூன்றாம் பரிசு Rs.1000/- 

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 
 குவிகம் நடத்தும் இலக்கிய விநாடி வினாவிற்கு உங்கள் அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம். 

போட்டி இரு சுற்றுகளாக நடைபெறும் தேர்வுச்சுற்று தேர்வுச் சுற்று 2021 ஜனவரி முதல் தேதி முதல் பத்தாம் தேதி வரை இணையம் வழியாக Quizizz.com மூலம் நடைபெறும். 

விதிமுறைகளை முழுவதும் படித்துவிட்டு பங்கேற்கவும் 

போட்டி / முடிவுகள்  குறித்து தகவல் தெரிவிக்க
உங்கள் அலைபேசி எண்  மற்றும் மின்னஞ்சல் முகவரியை  அனுப்பிவைக்கவும்.  (illakiyavaasal@gmail.com  அல்லது 9791069435 whatsApp) .

தேர்வுச் சுற்றின் இணைப்பு : https://quizizz.com/join?gc=31597012 

ஒருவர் ஒருமுறைதான் போட்டியில் பங்குகொள்ள முடியும். 


இணைந்ததும் google id அல்லது மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

தேர்வினைத் தொடங்கியபின் இறுதிவரை பங்குகொண்டால் மட்டுமே உங்கள் விடைகள் பதிவாகும். 
 
தேவைப்பட்டால் GC (games code) எண் 31597012 என்று கொடுக்கவும் 

கேள்விகளுக்கு தமிழில்தான் பதிலளிக்க வேண்டும் 

ஒரு கேள்வியையும் தவிர்க்க இயலாது. பதில் தெரியாவிட்டால் விடையில் ஏதேனும் ஒரெழெத்தாவது அடித்துவிட்டு அடுத்த கேள்விக்குச் செல்லவும்.

சரியாக விடையளித்தாலும் பதிலளிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் பொறுத்து மதிப்பெண்கள் மாறுபடும். 

தேர்வுச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் நேரலையில் கலந்துகொள்வார்கள் 

தேர்வுச் சுற்றின் முடிவுகள் ilakkiyavaasal.blogspot.com வலைத்தளத்தில் ஜனவரி பதினைந்தாம் தேதி வெளியிடப்படும். 

இறுதிச்சுற்று 17.01.2021 ஞாயிறு அன்று இந்திய நேரப்படி 18.30 மணிக்கு ‘zoom’ மூலம் நடைபெறும்.  அதற்கான இணைப்பு பின்னர் தரப்படும். 

முந்தைய சுற்றில் தேர்ந்தெடுக்கப்படவர்கள் ஆறு பேர் நேரலையில் போட்டியில் பங்குபெறுவர்கள். 

மற்றவர்கள் நிகழ்வினை கண்டுகளிக்க வரவேற்கிறோம்
நிகழ்வின் இறுதியில் பார்வையாளர்களுக்கான சில கேள்விகளும் இடம்பெறும்


இரண்டு சுற்றுகளிலும் நடத்துனரின் முடிவே இறுதியானது ஆகும்.


தேவைப்பட்டால் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும் 

97910 69435, (கிருபானந்தன்)                         9442525191 (சுந்தரராஜன்)


விவரங்களை ஆர்வமுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

Saturday 26 December 2020

கடந்து வந்த பாதை


 

     குவிகம் இணைய இதழ் 2013 நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ‘குவிகம்’  25 மின் பக்கங்களுடன் கதைகள்வழக்கமான கவிதைகள்கட்டுரைகள் தவிரஒலிவடிவங்கள்காணொளிகள் இடம் பெறும்    மின்னிதழாக விளங்குகிறது 


                            மின்னிதழ் படிக்க



வாசகசாலை’, ‘தமிழ்ப் புத்தக நண்பர்கள்’, ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ போன்ற அமைப்புகள் தொடங்கப்பட்ட காலகட்டமும் அதுதான் என்பது தற்செயல் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

                     இந்த ஐந்தாண்டுகளில் ‘கொரோனா’ காரணமாக நடத்தப்படாத மார்ச்ஏப்ரல் 2020 தவிர ஓவ்வொரு மாதமும் கூட்டம் நடந்திருக்கிறது. முதல் கூட்டத்தில் 40 நண்பர்கள் கலந்துகொண்டார்கள். சராசரி வருகை 25 தான். நிகழ்ச்சியைப் பொறுத்து கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும்.



    கவியரங்கத்தில் ஆரம்பித்துகலந்துரையாடல்நேர்காணல்சிறுகதைப் போட்டிசிறப்புரைகள்விமர்சனக் கூட்டங்கள்புத்தக அறிமுகம் என்று வேறு வேறு வடிவங்களில் நிகழ்ச்சிகள் செய்து பார்த்திருக்கிறோம். முதலாம் ஆண்டு விழாவினை குழந்தைகளின் வில்லுப்பாட்டுஇந்திரா பார்த்தசாரதி மற்றும் அசோகமித்திரன் உரைகள்,கோமல் சுவாமிநாதன் எழுதிய மனித உறவுகள் நாடகம் ஆகிய மூன்று பகுதிகளைக்கொண்ட இயல் இசை நாடகம் நிகழ்வாக நடந்தது.



இயன்றவரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் பங்கேற்பவர்கள் ஆக இருக்க வேண்டும் என்பதும் ஒரு நோக்கம். “ஒரே வடிவமாக இல்லாமல் அடுத்த நிகழ்வு எந்த வடிவில் இருக்கப்போகிறது என்பது சஸ்பென்ஸ்” என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். அந்த சஸ்பென்ஸ் மற்ற நண்பர்களுக்கும் மட்டுமல்ல நடத்துகிற எங்களுக்கும் தான்.



2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் குவிகம் இலக்கிய வாசலின் நிகழ்வுகள் இலக்கியச் சிந்தனை மாதாந்திர நிகழ்வுகளோடு சேர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இலக்கிய சிந்தனை சார்பில் ஒரு உரையும் அதைத் தொடர்ந்துகுவிகம் நடத்தும் நிகழ்வு என்று நடக்கின்றன சில மாதங்களில் இரண்டு அமைப்புகளும் சேர்ந்த ஒரே நிகழ்வாகவும் அவ்வப்போது நடைபெறுவது உண்டு.

 

                2017 மே மாதம் ‘பிரிண்ட் ஆன் டிமான்ட்’ என்கிற வசதி குறித்து திரு சிவகுமார் உரையாற்றினார். அதில் கலந்து கொண்ட பல நண்பர்கள் புத்தகங்களை அவர்களே வெளியிட்டு பல சிரமங்களை அனுபவித்து இருந்ததாகத் தெரியவந்தது. இந்த POD வசதி அவர்களுக்கெல்லாம் உபயோகப்படும் என்று தோன்றியது. உடனடியாக வேறு யாரும் அந்த முயற்சி செய்யாதபோது குவிகம் முயற்சியில் முதல் புத்தகம் ஜூலை 2007ல் வெளிவந்தது. 



  நண்பர்களுக்காகக் குறைந்த செலவில் குறைந்த நேரத்தில் புத்தகம் பதிப்பிக்கும் இந்தப் பணி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. விரைவில் தனது 50ஆவது புத்தகத்தை வெளியிட இருக்கிறது. 


   புத்தகக் காட்சியில் அழகியசிங்கர் அவர்களின் விருட்சம் அரங்கில் ஒரு முயற்சியும் செய்ய ஆரம்பித்தோம். அதுதான் புத்தகப் பரிமாற்றம். படித்ததைப் போட்டுபிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்னும் குவிகம் ‘bookXchange’.
       குவிகம் மற்றும் விருட்சம் நடத்தும் எல்லாக் கூட்டங்களிலும் இந்த புத்தகப் பரிமாற்றம் இடம்பெறுகிறது.



2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை தியாகராய நகரில்தணிகாசலம் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் “குவிகம் இல்லம்” தொடங்கப்பட்டது. 


    சிறிய  அளவில் இலக்கிய நிகழ்வுகள் நடத்த அரங்கமும்புத்தகப் பரிமாற்றம் வசதியும்அமர்ந்து படித்துவிட்டுப் போகக்கூடிய ஒரு நூலகமும் கொண்டு இயங்குகிறது. ஆவணப் படங்கள்குறும் படங்கள் ஆகியவை பார்க்கவும் வசதி உள்ளது.மாதத்தில் மூன்று வாரங்கள் ஞாயிற்றுக்கிழமையன்று அளவளாவல் என்கிற ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடை நடைபெற்று வந்தது. நாளடைவில் இன்னும் இரு அமைப்புகள் இணைந்து கொண்டார்கள். இலக்கிய அமுதம் அமைப்பு மாதம் ஒரு நிகழ்வை நடத்துகிறது. ‘யவனிகா’ அமைப்பு ‘அரங்கம்’ என்கிற நாடகம் சம்பந்தப்பட்ட நிகழ்வினை மாதம் ஒருமுறை நடத்தி வருகிறது. மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு அளவளாவல் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. மேலும் ‘யவனிகா’, ‘கோமல் தியேட்டர்’ ஆகிய நாடகக் குழுக்கள் தங்களது ஒத்திகைகள் இல்லத்தில் நடத்திக் கொள்கிறார்கள்.

     ஐந்தாவது ஆண்டு நிறைவுவினை சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்கிற எண்ணம் கொரானா பாதிப்பால் செயல்படுத்த இயலவில்லை. தவிர மார்ச் மாதம் முதல் நிகழ்வுகள் நடத்த முடியவில்லை. 

        
அதனால்28.3.2020  தொடங்கி ஞாயிற்றுக்கிழமைகளில் இணையவழியாக அளவளாவல் நிகழ்வு நடத்தப்படுகின்றன. இணையவழி அளவளாவல் சிலவற்றின் இணைப்புகள் 


"மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்” என்னும் ஒலிநாடகம் தயாரிப்பில் உள்ளது. இயல்புநிலை திரும்புவதற்காகக் காத்திருக்கிறது. 

    குவிகம் குறித்து ‘அமுதசுரபி’மாம்பலம் டைம்ஸ், ‘ டி நகர் டாக்’ ஆகிய பத்திரிகைகளிலும், ‘தழல்’, ‘ராஜ் வெப் டிவி’ ஆகிய காணொளி ஊடகங்களிலும், ‘சிலிக்கான் ஷெல்ஃப்’, ‘ஸ்நாப்ஜட்ஜ்’ வலைப்பூக்களிலும் செய்திகள் வெளியீட்டுச் சிறப்பு செய்திருக்கிறார்கள்.   
       மின் இதழில் தொடங்கிமாதாந்திரக் கூட்டங்கள் என்று தொடர்ந்துகுவிகம் பதிப்பகமும் உருவாகிபுத்தகப் பரிமாற்றம்குவிகம் இல்லம்இணையவழி அளவளாவல் என்று வேறுபட்ட செயல்பாடுகளுடன் மகிழ்ச்சியோடு இயங்கி வருகிறது.

   இனிய நண்பர்களின் உறுதுணையோடுநிறைய மகிழ்வுதரும் அனுபவங்களோடு  குவிகம் செயல்பட்டு வருவது மன நிறைவைத் தருகிறது.