Wednesday 13 October 2021

குறும் புதினம் 2022-23





ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை வெளிவர இருக்கும் இதழ்களுக்காக உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்.

1.      முதல், இரண்டாவது, மூன்றாவது பரிசுகள் முறையே ₹5000, ₹3000, ₹2000 வழங்கப்படும்.

2. பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும் மற்ற கதைகளுக்குத் தலா ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்.

3. படைப்புகள் நாலாயிரம் முதல் எட்டாயிரம் சொற்களுக்குள் (4000 -8000) இருக்கவேண்டும்.

4. அச்சு மற்றும் இணையதளம்/ வலைப்பூ/ முகநூல்/ கிண்டில் போன்ற எதிலும் பிரசுரமான படைப்புகளாக இருக்கக் கூடாது.

5. முடிவுகள் அறிவிக்கப்படும்வரை வேறு போட்டிக்கோ பிரசுரத்திற்கோ அனுப்பக்கூடாது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்ந்தெடுக்கப்படாத படைப்புகளை வேறு பிரசுரங்களுக்கு அனுப்பலாம்.

6. படைப்புகள் யூனிகோட் எழுத்துருவில் MSWORD கோப்பாக மின்னஞ்சலில் kurumpudhinam@gmail.com முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

7. ஒருவர் ஒரு படைப்புக்குமேல் அனுப்பவேண்டாம்.

8. முந்தைய ஆண்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களும் வெற்றி பெறாதவர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம், ஆனால் சென்ற ஆண்டு அனுப்பிய கதைகளைத் திரும்ப அனுப்ப வேண்டாம்.

9. சமூக மேம்பாட்டுக் கதைகள், மனோதத்துவக் கதைகள், நகைச்சுவைக் கதைகள், அறிவியல் கதைகள், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கதைகள், சரித்திர ஆராய்ச்சிக் கதைகள், வட்டார மொழிக் கதைகள், மனோ தத்துவக் கதைகள், பெண்ணீயக் கதைகள் போன்ற குறும் புதினங்களை எதிர்பார்க்கிறோம்.

10. படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் 15/12/2021.

தேர்வாளர்களின் முடிவே இறுதியானது.

Monday 11 January 2021

குவிகம் விநாடி வினா - தேர்வுச் சுற்று முடிவுகள்

 


குவிகம் இலக்கிய விநாடி வினா

தேர்வுச்சுற்று முடிவுகள்

ஜனவரி பத்தாம் தேதி வரை நடந்த முதல் சுற்றில் முதல் 12 இடங்களைப் பிடித்தவர்கள்:-

 7135 Sanjit

RK Kalavan

Murugesapandian Shanmugavel

மோகன்ராஜ்

Bannari Shankar

Priyanka Bhatt

Duraisamy Dhanabalan

Sivarajakumar M

Raya Chellappa

mouli s

Usha ( Nagendra Bharathi )

Valiyur Subramanian

பனிரெண்டு நண்பர்களுக்கும் மனம் கனிந்த பாராட்டுகள். மற்றும் ஒரு வேண்டுகோள். ஜனவரி 17 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவிருக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் விருப்பத்தை உங்கள் மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண் ஆகிய தகவல்களுடன் 8939604745 எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவுவோ ilakkiyavaasal@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ 14.01.2021 மாலை 8.00 மணிக்குள் தெரிவிக்கவும்.

விருப்பம் தெரிவிக்கும் நண்பர்களில், மேற்கண்ட பட்டியல் வரிசைப்படி முதல் ஆறு நண்பர்கள் 17.1.2021 நிகழ்வில் பங்குபெறுவார்கள்.

 17.01.2021 நிகழ்வில் பார்வையாளர்களுக்கான கேள்விகளும் உண்டு. நிகழ்வினைக் கண்டுகளிக்கவும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவும் அனைவரையும், முக்கியமாக தேர்வுச்சுற்றில் பங்குகொண்ட நண்பர்களையும், அன்போடு அழைக்கிறோம்