Tuesday, 26 July 2016

"கதை கேளு - கதை கேளு" - ஜூலை 2016 நிகழ்வின் பதிவு




நமது ஜூலை 2016 மாத நிகழ்வான "கதை கேளு - கதை கேளு" ஆழ்வார்பேட்டை அம்புஜம்மாள்  சாலையில் அமைந்துள்ள ஸ்ரீநிவாஸ காந்தி நிலையத்தில் சிறப்புற நடைபெற்றது.

திரு சுந்தரராஜன் அனைவரையும் வரவேற்று ஒருங்கிணைப்பு செய்தார். கதை சொல்லுதல் என்னும்  முறை தற்போது பிரபலமடைந்து வருவதாகக்கூறி அதனை குவிகம் இலக்கியவாசல்  முயற்சியாக இந்த நிகழ்வு  அமைகிறது என்றார்.

திருமதி விஜயலக்ஷ்மி சுந்தரராஜன்     "எது கவிதை" என்ற கவிதையை வாசித்தார்.

பத்து கதை சொல்லிகளின் சொல்லிய கதைகளின் ஒளிவடிவம் இதோ...


"அமானுஷ்யன்"  திரு சிந்தாமணி சுந்தரராமன்.







”மரமேற இயலாதபோது....!”. -   ஜெயராம் ரகுநாதன்




"திருப்பம்"  திரு  G B சதுர்புஜன்    








"பயந்த சுபாவி" - திரு சுரேஷ் ராஜகோபால்
















"நன்றிக்கடன் "  முனைவர்         

திருமதி மணிக்காத்தாள்











 "காலிங் பெல்"  திரு புது ஸ்ரீநிவாசன்



"புலி"   திருமதி உமா பாலு 
.














"ஹலோ, நான் அம்மா பேசறேன்"   திருமதி கீதா கைலாசம்
 " ஓ வியந்தான்"   திரு மாதேவன் 


குமாரி மிருதுளா "ஆலமரம்"


கதைகளைப் பற்றிய கதை கேட்டோர்களின் கருத்துக்களுக்குப் பிறகு திரு கிருபானந்தனின்  நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது 








Monday, 25 July 2016

"கதை கேளு - கதை கேளு" அறிவிப்பு

"கதை கேளு - கதை கேளு"

கதை சொல்லும் நிகழ்வு
பதினைந்து கதை சொல்லிகள்  தங்கள் சிறுகதைகளை சொல்லும் நிகழ்விற்கு தங்களை வரவேற்கிறோம்.  


சனிக்கிழமை –
 23 ஜூலை 2016
மாலை 6.00 மணி

ஸ்ரீநிவாச காந்தி நிலையம்,
அம்புஜம்மாள் சாலை ஆழ்வார்பேட்டை, 
சென்னை 600018


(நிகழ்ச்சி மாலை ஆறுமணிக்கே தொடங்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்)
                  

குவிகம் மின்னிதழ் படிக்க                    kuvikam.com                               தொடர்பிற்கு :                                                          - ilakkiayavaasal@gmail.com

Tuesday, 5 July 2016

வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள்




முன் குறிப்பு :  இணைய தளங்களின் பெயர்களைச் சொடுக்கி அந்தத் தளங்களுக்குச் செல்லலாம்

குவிகம் இலக்கிய வாசலின் 2016 ஜூன் மாத நிகழ்வான "வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள்" 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை எலியட்ஸ் கடற்கரைச்
 சாலையில் அமைந்திருக்கும் 'ஸ்பேசஸ்' அரங்கில் சிறப்பாக நடந்தேறியது.

சுந்தரராஜன் குவிகம் அமைப்பைப்பற்றியும் இந்நிகழ்வின்(வ்) நோக்கம் பற்றியும் கூறி  அனைவரையும் வரவேற்று நிகழ்வை தொடங்கிவைத்தார்

திரு வேணுகோபால் அவர்கள் வாசித்த(வ்) "தர்பன சுந்தரி'  எல்லோரையும் நெகிழச்செய்த கதையாக அமைந்தது
சிந்தாமணியின் கவிதைகள்(வ்) நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தன 

இணையம் பற்றியும் சிற்றலை வானொலிபற்றியும் பல தகவல்களுடன் ஜெய்சக்திவேல் தனது கருத்துக்களைக் கூற கலந்துரையாடல்(வ்) தொடங்கியது.வானொலி பற்றி விரிவாகப் பேசிய இவர் குறிப்பிட்ட தளங்கள்  சர்வ தேச வானொலி  மற்றும் பிராஜக்ட் மதுரை.

தாரிணி கணேஷ் கோமல் சாமிநாதன் சாமிநாதன் அவர்களின்(வ்) இலக்கிய இதழ் "சுபமங்களா"   வெளியிட்ட படைப்புகளை  இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படிருந்ததாகவும்  இப்போது தளம் செயல்படுகிறதா என்று தெரியவில்லை என்று  தெரிவித்தார்

கலந்துரையாடல் நிகழ்வில் பெரும்பாலானோர் கலந்துகொண்டது மிகுந்த நிறைவைத் தந்தது. அச்சடிக்கப்பட்டவையும் இணையத்தில் கிடைப்பவையும் (படிப்பு அனுபவம் வேறுபட்டாலும்)  இரண்டும் தேவையே என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டது . முழு விவாதங்களையும் காண   

இறுதியாகப் பேசிய கிருபானந்தன் தன் நன்றி உரையுடன் இலக்கியப் பணியாற்றிவரும் தளங்களில் ஒரு சிலவற்றைக் (பட்டியல் இணைப்பில்) குறிப்பிட்டார். 


நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

இணைப்பு 

இணைய இதழ்கள் 


 எழுத்தாளர்களின் வலைப்பூக்கள் 


சிறுகதைகள் 


விமர்சன தளங்கள்