20-ஆக்ஸ்ட்-2016 அன்று மாலை டிஸ்கவரி புக்
பேலஸில் நடந்தேறிய நிகழ்வில் எழுத்தாளர்
எஸ்.ராமகிருஷ்ணன் "சமிபத்தில் வாசித்த புத்தகங்கள்" என்ற தலைப்பில்
உரையாற்றினார். திரு சுந்தரராஜனின் வரவேற்புரையைத் தொடர்ந்து திருமதி லதா ரகுநாதன் தனது "சட்டென்று மலர்ந்த பவழமல்லிகை" சிறுகதையை வாசித்தார்.
இம்மாதக் கவிதை "நேரமில்லை" வாசித்து மகிழ்வித்தவர் திரு GB சதுர்புஜன் ஒன்றரை மணி நேரம் மடை திறந்த வெள்ளமாய்
"சமீபத்தில் படித்த புத்தககங்கள்" குறித்து திரு. எஸ். ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.
உரையில் அவர் குறிப்பிட்ட புத்தகங்கள்:-.
1)The
man who loved china - Simon Winchester
பல துறைகளிலும் சீனாவின் பங்களிப்பு குறித்த
பிரம்மாண்டமான ஆராய்ச்சி நூல்
2)துக்கலின் கதைகள் – சாகித்ய
அகாதமி வெளியீடு
இந்திய பாகிஸ்தான்
பிரிவினையின் கொடூரங்கள் பற்றிய பஞ்சாபி இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் கர்த்தார் சிங் துக்கல்,யின் கதைகள் –
தமிழ் மொழிபெயர்ப்பு
3)ஆளற்ற பாலம் -
கொண்டபல்லி கோடேஸ்வரம்மா
தமிழில் : கௌரி
கிருபானந்தன் - காலச்சுவடு வெளியீடு
ஆந்திரா மற்றும்
தெலுங்கானா பகுதிகளில் நக்ஸலைட் இயக்கப் போராளியும் PWG நிறுவனர் கொண்டபல்லி
சீதாராமையாவின் மனைவியும் ஆன கோடேஸ்வரம்மாவின் சுயசரிதம்
4)இடைவெளி – சம்பத்
குறைவாகவே எழுதியிருக்கும் சம்பத் அவர்களின் முழுதும்
மரணம் பற்றிய குறுநாவல். சம்பத் கதைகள் : தொகுதி 2 (விருட்சம் வெளியீடு)
5) Land of seven
rivers: History of India's Geography -Book by Sanjeev Sanyal
6) புதுமைப்பித்தன் கதைகள்
7) Zen Flesh and Zen
Bones ஜென்
சதை ஜென் எலும்புகள் ஆசிரியர்:
நியோஜென் சென்ஸகி பால் ரெப்ஸ் தமிழில் : சேஷையா ரவி அடையாளம் பதிப்பகம்
8)வாழும் நல்லிணக்கம் - சபா
நக்வி
தமிழில்: முடவன்குட்டி முகம்மது அலி வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
9) பாரதிதாசன் - முருகு சுந்தரம்
11) Savaging the Civilized: Verrier Elwin, His
Tribals and India - Ramachandra Guha
12) Genesis: Genesis v. 1: Volume 1 (Memory of Fire)
Memory of Fire V 2: Faces & Masks (Memory of Fire
Trilogy)
Century of the Wind: Century of Wind V. 3: Volume 3
(Memory of Fire)
13) Mirrors: Stories of Almost Everyone - Eduardo
Galeano 14) ஓசிப் ,மெண்டல்ஷ்ட்ராம்
கவிதைகள்
(தமிழில்:- விருட்சம்
வெளியீடு)
15) "Wifes" The
sacrifice of wifes of famous writers like Tolstroy
பார்வையாளர்களின் கேள்விகளுக்கு
எஸ் ரா வின் பதில்களுக்குப் பிறகு கிருபாநந்தனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
திரு ராமகிருஷ்ணன் அவர்கள் உரையை சுருதி TV பதிவேற்றி உள்ளது