Sunday, 22 November 2015

பாண்டிய நெடுங்காப்பியம்- வரலலாற்றுப் பின்னணி - எட்டாவது நிகழ்வின் பதிவு


எட்டாவது நிகழ்வு 

பாண்டிய நெடுங்காப்பியம் - வரலாற்றுப் பின்னணி - ஒரு பதிவு


குறிப்பிடத்தக்க சமீத்திய சரித்திர நாவலின் ஆசிரியை திருமதி ஸ்ரீஜா வெங்கடேஷ் பங்கு பெற்ற நமது எட்டாவது நிகழ்வு 21.11.2015 அன்று பனுவல் புத்தக நிலைய அரங்கில் நிறைவேறியது.

திருமதி விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தார்.

இம்மாதக் இம்மாதக் கதையினை கீதா அவர்கள் வாசித்தார்கள்

.
இம்மாதக் கவிதை அளித்தவர் சாந்தி 

  

விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் எழுத்தாளர் அறிமுகம் வாசித்தார்


சுருக்கமாக எனினும் ஆழமான தன் உரையில் ஸ்ரீஜா வெங்கடேஷ் தனது அனுபவங்களையும், பாண்டிய நெடுங்காப்பியம் உருவாகிய கதையினையும் அதில் கிடைத்த அனுபவங்களையும் சுவையான செய்திகளையும் பகிர்ந்துகொண்டார்


அமைப்பாளர்கள் சார்பில் தனது கருத்துக்களை கிருபானந்தன் அளித்தார்


பங்கேற்ற சரித்திர ஆர்வத்தினை பிரதிபலித்த   பார்வையாளர்களின் கேள்விகளும்,  ஸ்ரீஜா அவர்களின் களப்பணி அனுபவம் பின்னணியில்  மறுமொழியும் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக விளங்கியது





.சுபா சுரேஷ் நன்றி நவில ஒரு இனிய நிகழ்வு நிறைவுபெற்றது








.

குவிகம் இலக்கிய வாசலின் எட்டாவது நிகழ்வு - அறிவிப்பு


குவிகம் இலக்கிய வாசலின் எட்டாவது நிகழ்வு 
 

"பாண்டிய நெடுங்காப்பியம்" - வரலாற்றுப் பின்னணி

 

 பகிர்ந்துகொள்பவர்

நாவலாசிரியை ஸ்ரீஜா வெங்கடேஷ்
(ஒரு சரித்திர நாவல் உருவாகியதின் களப்பணி அனுபவங்களும் சுவையான செய்திகளும்)

இம்மாதம் கவிதை வாசிப்பவர் :-    சாந்தி அவர்கள்
இம்மாதம் சிறுகதை வாசிப்பவர் :-    கீதா அவர்கள்
 

நாள்:  21 நவம்பர்  2015 
சனிக்கிழமை ,
மாலை - 6.30 மணி  

இடம்: பனுவல் புத்தக நிலையம்,
             
எண். 112, திருவள்ளுவர் சாலை
             திருவான்மியூர் சென்னை  600041  

(திருவான்மியூர் சிக்னல் ,   திருவான்மியூர் பேருந்து நிலையம்
மற்றும்  BOMBAY DYEING SHOW ROOM அருகில்)