Saturday, 24 December 2016

த ஜெயகாந்தன் ஆவணப்படம் திரையிடல்



குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் 2016 நிகழ்வாக"எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – த. ஜெயகாந்தன்" ஆவணப்படமும் அதன் இயக்குனர் திரு ரவி சுப்ரமணியனுடன் உரையாடலும் நவம்பர் 18 அன்று  சிறப்பாக நடைபெற்றது.


சுந்தரராஜனின் வரவேற்பு உரைக்குப்பின்னர் திரு ஈஸ்வர் கிருஷ்ணன் கவிதை  வாசித்தார். 










தொடர்ந்து இம்மாதச் சிறுகதையினை திரு சுப்ரமணியன் வாசித்தார்.









திரு ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் திரு ஜெயகாந்தன் அவர்களைப்பற்றிய ஆவணப்படம் "எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – த. ஜெயகாந்தன்" திரையிடப்பட்டது.





சுமார் ஒன்றைரை மணி நேரம் அனைவரும் ஆர்வத்துடன் ஆவணப்படத்தினை பார்த்து மகிழ்ந்தனர்


நிகழ்வில் பங்குபெற்றோரின் கேள்விகளுக்கு ரவி சுப்ரமணியனின் பதில்கள் பல தகவல்கள் கொண்டதாக அமைந்தன

கிருபாநந்தனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

Tuesday, 29 November 2016

ஜெயகாந்தன் – ஆவணப்படமும் – உடையாடலும் அறிவிப்பு




குவிகம் இலக்கிய வாசலின் இம்மாத நிகழ்வாக 

"எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – த. ஜெயகாந்தன்"

ஆவணப்படமும் அதன் இயக்குனர் திரு ரவி சுப்ரமணியனுடன் உரையாடலும் இடம் பெறுகின்றன

கவிதை மற்றும் கதை வாசிப்பு – வழக்கம்போல் 

அனைவரும் வருக

Thursday, 10 November 2016

இணையத்தில் கோமலின் சுபமங்களா - ஒரு பதிவு



அக்டோபர் மாத நிகழ்வான 'கோமலின் சுபமங்களா'  இணையதள வெளியீடு பதினைந்தாம் தேதி  சனிக்கிழமை அன்று    P.S.உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள விவேகானந்தா அரங்கில் சிறப்பாக நடந்தேறியது.

சுந்தரராஜன் வரவேற்க, இம்மாதக் கதையினை  ஸ்ரீதரனும் கவிதையினை கணபதி சுப்ரமணியனும் அளித்தார்கள். 

கவிஞர் வைத்தீஸ்வரன் அவர்களின் உரைக்குப் பிறகு 'கோமலின் சுபமங்களா' இணையதளம் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களால் வெளியிடப்பட்டது.

திரு கோமல் சாமிநாதன் அவர்களை  ஆசிரியராகக் கொண்டு 1991 முதல் 1995 வரை குறிப்பிடத்தக்க இலக்கிய இதழாக வெளிவந்த 59 இதழ்களும் , 2000 ஆண்டில் வெளிவந்த "சுபமங்களா ஒரு இலக்கியப் பெட்டகம்"  என்னும் மலரும் அடங்கிய இந்த இணையதளத்தின் அமைப்பினைப் பற்றிய அறிமுகத்தினை  கிருபானந்தன் செய்தார். 

இந்த இணையதளத்தின் முகவரி http://subamangala.in

இலக்கிய இதழ்களில் சுபமங்களாவின் ஈடு இணையற்ற இடம், கோமல் அவர்களின் சீரிய பண்புகள் மற்றும் பல்வேறு தகவல்கள் உள்ளடக்கிய சிறப்புரையினை திருப்பூர் கிருஷ்ணன் அளித்தார்.

கோமல் அவர்களின் புதல்வி தாரிணி கோமல், இப்பணியினைச் செய்ய உந்துதல் அளித்த இலக்கிய அன்பர்களுக்கும், அதனை செயலாக்க உறுதுணையாக இருந்தவர்களுக்கும் நன்றி கூறி தனது தந்தையின் அன்பு, ஆற்றல் மற்றும் மனத்திடம் பற்றிக்   குறிப்பிட்டுப்  பேசினார்.
நன்றி உரைக்குப்பின் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

 நிகழ்வு முழுவதும் ஒளிக்காட்சியாக சிறப்பாகப்  பதிவு செய்துள்ள திரு விஜயன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி. 

 அவை  :- 


முதல் பகுதி   :


                               


இரண்டாம் பகுதி.  



மூன்றாம் பகுதி 







Sunday, 30 October 2016

கோமலின் சுபமங்களா - அறிவிப்பு

இம்மாத நிகழ்வு
திரு கோமல் சாமிநாதன் அவர்களை  ஆசிரியராகக் கொண்டு 1991 முதல் 1995 வரை குறிப்பிடத்தக்க இலக்கிய இதழாக வெளிவந்த 59 இதழ்களும் 2000 ஆண்டில் வெளிவந்த "சுபமங்களா ஒரு இலக்கியப் பெட்டகம்"  என்னும். மலரும் இணையத்தில் வெளியிடப்படுகின்றன

வெளியிடுபவர்  திரு. திருப்பூர் கிருஷ்ணன்

முன்னிலை   :கவிஞர்  வைத்தீஸ்வரன்



நாள் : அக்டோபர் 15, 2016

சனிக்கிழமை மாலை 6.00 மணி
விவேகானந்தா அரங்கம்
P.S.உயர்நிலைப் பள்ளி
ராமகிருஷ்ணா மடம் சாலை
மயிலை சென்னை 600 004
           அனைவரும் வருக 

Friday, 7 October 2016

இன்று இளைஞர் இலக்கியம் - அறிவிப்பு



இன்று .. இளைஞர் .. இலக்கியம் 


குவிகம் இலக்கிய வாசலின் இம்மாத நிகழ்வாக முழுவதும் இளைஞர்கள் வழங்கும் கதை, கவிதை, கருத்து நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  

இன்றைய தலைமுறையின் இலக்கியப் பார்வையினை அறிய இது ஒரு சாளரமாக அமையுமோ?   நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


நாள் : செப்டம்பர் 10,  2016
              
சனிக்கிழமை
நேரம்:  மாலை 6.30 மணி
ஸ்ரீநிவாச காந்தி நிலையம்,அம்புஜம்மாள் சாலை ஆழ்வார்பேட்டைசென்னை 600018

இன்று .. இளைஞர் .. இலக்கியம் - ஒரு பதிவு




குவிகம் இலக்கிய வாசலின் பதினெட்டாவது நிகழ்வாக 
 இன்று .. இளைஞர் .. இலக்கியம் 
                             


செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் ஆழ்வார்பேட்டை அம்புஜம்மாள் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

திரு சுந்தரராஜனில் வரவேரற்பிற்குப் பிறகு திரு மாதேவன் நிகழ்ச்சியினை தொகுத்து அளித்தார்









நிகழ்வினை சிறப்பித்த இளம் படைப்பாளிகள் 

"யார் என் மீனா?"  கவிதை






ஈஸ்வர் கிருஷ்ணன்


விஜயநரசிம்மன்
"உதவி யாருக்கு?" சிறுகதை


சுந்தர் கோபாலகிருஷ்ணன்,
 "அனிச்ச இரவுகள்" சிறுகதை
                                                                                              
 உமா ஜெயபாலன்

"மரம்" கவிதை,


   அவினாஷ் ராமச்சந்திரன்
"தொப்பி மனிதன்" கவிதை ,

"சவ்வூடு பரவல்"  கவிதை 
 கயல்விழி 



, "எண்ணோடு விளையாடு" சிறுகதை 
 சிவராமன்

"கோமகள்" சிறுகதை
ஈஸ்வர் வெங்கடேச பெருமாள் 

,

வித்யா தன்ராஜ்
"சக்ரபாணி"  சிறுவர் கதை சொல்லல் 





கிருபானந்தனின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது

Sunday, 21 August 2016

"சமீபத்தில் படித்த புத்தகங்கள்" --- அறிவிப்பு


குவிகம் இலக்கிய வாசல் தனது வலைப்பூவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறது


குவிகம் இலக்கிய வாசலின் இம்மாத நிகழ்வு

"சமீபத்தில் படித்த புத்தகங்கள்"

எழுத்தாளர் திரு  எஸ் ராமகிருஷ்ணனின் உரை

(கதை மற்றும் கவிதை வாசிப்பு வழக்கம்போல்)
அ னை வ ரு ம்   வ ரு க

நாள்  :                         20 ஆகஸ்ட் 2016   சனிக்கிழமை
நேரம் :                              மாலை 6.30 மணி

   டிஸ்கவரி புக் பேலஸ்

எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர்,
சென்னை - 600078.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
அரங்கம் அடைய


குவிகம் மின்னிதழ் படிக்க                    kuvikam.com                               தொடர்பிற்கு :                                                          - ilakkiayavaasal@gmail.com


"சமீபத்தில் படித்த புத்தகங்கள்"







20-ஆக்ஸ்ட்-2016 அன்று  மாலை டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தேறிய நிகழ்வில்  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் "சமிபத்தில் வாசித்த புத்தகங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.



திரு சுந்தரராஜனின் வரவேற்புரையைத் தொடர்ந்து திருமதி லதா ரகுநாதன் தனது  "சட்டென்று மலர்ந்த பவழமல்லிகை" சிறுகதையை வாசித்தார்.
















இம்மாதக் கவிதை "நேரமில்லை" வாசித்து மகிழ்வித்தவர் திரு GB சதுர்புஜன்







ஒன்றரை மணி நேரம் மடை திறந்த வெள்ளமாய்

"சமீபத்தில் படித்த புத்தககங்கள்" குறித்து திரு. எஸ். ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.



உரையில் அவர் குறிப்பிட்ட புத்தகங்கள்:-.

1)    The man who loved china - Simon Winchester
பல துறைகளிலும் சீனாவின் பங்களிப்பு குறித்த பிரம்மாண்டமான ஆராய்ச்சி நூல்
2)    துக்கலின் கதைகள்       – சாகித்ய அகாதமி வெளியீடு
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் கொடூரங்கள் பற்றிய பஞ்சாபி இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் கர்த்தார் சிங் துக்கல்,யின் கதைகள் – தமிழ் மொழிபெயர்ப்பு  
3)    ஆளற்ற பாலம் - கொண்டபல்லி கோடேஸ்வரம்மா
தமிழில் : கௌரி கிருபானந்தன்     - காலச்சுவடு வெளியீடு
ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் நக்ஸலைட் இயக்கப் போராளியும் PWG நிறுவனர் கொண்டபல்லி சீதாராமையாவின் மனைவியும் ஆன கோடேஸ்வரம்மாவின் சுயசரிதம் 
4)    இடைவெளி – சம்பத்
குறைவாகவே எழுதியிருக்கும் சம்பத் அவர்களின் முழுதும் மரணம் பற்றிய குறுநாவல். சம்பத் கதைகள் : தொகுதி 2  (விருட்சம் வெளியீடு)
5)     Land of seven rivers: History of India's Geography -Book by Sanjeev Sanyal
6)     புதுமைப்பித்தன் கதைகள்
7)     Zen Flesh and Zen Bones
ஜென் சதை ஜென் எலும்புகள்
ஆசிரியர்: நியோஜென் சென்ஸகி பால் ரெப்ஸ் தமிழில் : சேஷையா ரவி அடையாளம் பதிப்பகம்
8)    வாழும் நல்லிணக்கம் - சபா நக்வி 
தமிழில்: முடவன்குட்டி முகம்மது அலி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
9) பாரதிதாசன் - முருகு சுந்தரம்
11) Savaging the Civilized: Verrier Elwin, His Tribals and India - Ramachandra Guha
12) Genesis: Genesis v. 1: Volume 1 (Memory of Fire)
Memory of Fire V 2: Faces & Masks (Memory of Fire Trilogy)
Century of the Wind: Century of Wind V. 3: Volume 3 (Memory of Fire)
13) Mirrors: Stories of Almost Everyone - Eduardo Galeano
14) ஓசிப் ,மெண்டல்ஷ்ட்ராம் கவிதைகள்
(தமிழில்:- விருட்சம் வெளியீடு)
15) "Wifes"    The sacrifice of wifes of famous writers like Tolstroy

பார்வையாளர்களின் கேள்விகளுக்கு
எஸ் ரா வின் பதில்களுக்குப் பிறகு கிருபாநந்தனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.



திரு ராமகிருஷ்ணன் அவர்கள் உரையை சுருதி TV  பதிவேற்றி உள்ளது




அவர்களுக்கு எங்கள் நன்றி


Tuesday, 26 July 2016

"கதை கேளு - கதை கேளு" - ஜூலை 2016 நிகழ்வின் பதிவு




நமது ஜூலை 2016 மாத நிகழ்வான "கதை கேளு - கதை கேளு" ஆழ்வார்பேட்டை அம்புஜம்மாள்  சாலையில் அமைந்துள்ள ஸ்ரீநிவாஸ காந்தி நிலையத்தில் சிறப்புற நடைபெற்றது.

திரு சுந்தரராஜன் அனைவரையும் வரவேற்று ஒருங்கிணைப்பு செய்தார். கதை சொல்லுதல் என்னும்  முறை தற்போது பிரபலமடைந்து வருவதாகக்கூறி அதனை குவிகம் இலக்கியவாசல்  முயற்சியாக இந்த நிகழ்வு  அமைகிறது என்றார்.

திருமதி விஜயலக்ஷ்மி சுந்தரராஜன்     "எது கவிதை" என்ற கவிதையை வாசித்தார்.

பத்து கதை சொல்லிகளின் சொல்லிய கதைகளின் ஒளிவடிவம் இதோ...


"அமானுஷ்யன்"  திரு சிந்தாமணி சுந்தரராமன்.







”மரமேற இயலாதபோது....!”. -   ஜெயராம் ரகுநாதன்




"திருப்பம்"  திரு  G B சதுர்புஜன்    








"பயந்த சுபாவி" - திரு சுரேஷ் ராஜகோபால்
















"நன்றிக்கடன் "  முனைவர்         

திருமதி மணிக்காத்தாள்











 "காலிங் பெல்"  திரு புது ஸ்ரீநிவாசன்



"புலி"   திருமதி உமா பாலு 
.














"ஹலோ, நான் அம்மா பேசறேன்"   திருமதி கீதா கைலாசம்
 " ஓ வியந்தான்"   திரு மாதேவன் 


குமாரி மிருதுளா "ஆலமரம்"


கதைகளைப் பற்றிய கதை கேட்டோர்களின் கருத்துக்களுக்குப் பிறகு திரு கிருபானந்தனின்  நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது