சுந்தரராஜன் வரவேற்க, இம்மாதக் கதையினை ஸ்ரீதரனும் கவிதையினை கணபதி சுப்ரமணியனும் அளித்தார்கள்.
கவிஞர் வைத்தீஸ்வரன் அவர்களின் உரைக்குப் பிறகு 'கோமலின் சுபமங்களா' இணையதளம் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களால் வெளியிடப்பட்டது.
திரு கோமல் சாமிநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1991 முதல் 1995 வரை குறிப்பிடத்தக்க இலக்கிய இதழாக வெளிவந்த 59 இதழ்களும் , 2000 ஆண்டில் வெளிவந்த "சுபமங்களா ஒரு இலக்கியப் பெட்டகம்" என்னும் மலரும் அடங்கிய இந்த இணையதளத்தின் அமைப்பினைப் பற்றிய அறிமுகத்தினை கிருபானந்தன் செய்தார்.
இந்த இணையதளத்தின் முகவரி http://subamangala.in
இலக்கிய இதழ்களில் சுபமங்களாவின் ஈடு இணையற்ற இடம், கோமல் அவர்களின் சீரிய பண்புகள் மற்றும் பல்வேறு தகவல்கள் உள்ளடக்கிய சிறப்புரையினை திருப்பூர் கிருஷ்ணன் அளித்தார்.
கோமல் அவர்களின் புதல்வி தாரிணி கோமல், இப்பணியினைச் செய்ய உந்துதல் அளித்த இலக்கிய அன்பர்களுக்கும், அதனை செயலாக்க உறுதுணையாக இருந்தவர்களுக்கும் நன்றி கூறி தனது தந்தையின் அன்பு, ஆற்றல் மற்றும் மனத்திடம் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.
நன்றி உரைக்குப்பின் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
நிகழ்வு முழுவதும் ஒளிக்காட்சியாக சிறப்பாகப் பதிவு செய்துள்ள திரு விஜயன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.
அவை :-
முதல் பகுதி :
இரண்டாம் பகுதி.
மூன்றாம் பகுதி
No comments:
Post a Comment