Thursday, 31 December 2020
குவிகம் இலக்கிய விநாடி வினா
Saturday, 26 December 2020
கடந்து வந்த பாதை
வாசகசாலை’, ‘தமிழ்ப் புத்தக நண்பர்கள்’, ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ போன்ற
அமைப்புகள் தொடங்கப்பட்ட காலகட்டமும் அதுதான் என்பது தற்செயல் என்றுதான் சொல்ல
வேண்டும்.
இந்த
ஐந்தாண்டுகளில் ‘கொரோனா’ காரணமாக நடத்தப்படாத மார்ச், ஏப்ரல் 2020 தவிர ஓவ்வொரு மாதமும்
கூட்டம் நடந்திருக்கிறது. முதல் கூட்டத்தில் 40 நண்பர்கள் கலந்துகொண்டார்கள்.
சராசரி வருகை 25 தான். நிகழ்ச்சியைப் பொறுத்து கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும்.
கவியரங்கத்தில் ஆரம்பித்து, கலந்துரையாடல், நேர்காணல், சிறுகதைப் போட்டி, சிறப்புரைகள், விமர்சனக் கூட்டங்கள், புத்தக அறிமுகம் என்று வேறு வேறு
வடிவங்களில் நிகழ்ச்சிகள் செய்து பார்த்திருக்கிறோம். முதலாம் ஆண்டு விழாவினை
குழந்தைகளின் வில்லுப்பாட்டு, இந்திரா
பார்த்தசாரதி மற்றும் அசோகமித்திரன் உரைகள்,கோமல் சுவாமிநாதன் எழுதிய மனித உறவுகள் நாடகம் ஆகிய மூன்று பகுதிகளைக்கொண்ட
இயல் இசை நாடகம் நிகழ்வாக நடந்தது.
இயன்றவரை நிகழ்ச்சிகளில் கலந்து
கொள்பவர்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் பங்கேற்பவர்கள் ஆக இருக்க வேண்டும்
என்பதும் ஒரு நோக்கம். “ஒரே வடிவமாக இல்லாமல் அடுத்த நிகழ்வு எந்த வடிவில்
இருக்கப்போகிறது என்பது சஸ்பென்ஸ்” என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். அந்த
சஸ்பென்ஸ் மற்ற நண்பர்களுக்கும் மட்டுமல்ல நடத்துகிற எங்களுக்கும் தான்.
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்
குவிகம் இலக்கிய வாசலின் நிகழ்வுகள் இலக்கியச் சிந்தனை மாதாந்திர நிகழ்வுகளோடு
சேர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இலக்கிய சிந்தனை சார்பில் ஒரு உரையும் அதைத்
தொடர்ந்து, குவிகம் நடத்தும் நிகழ்வு என்று
நடக்கின்றன சில மாதங்களில் இரண்டு அமைப்புகளும் சேர்ந்த ஒரே நிகழ்வாகவும்
அவ்வப்போது நடைபெறுவது உண்டு.
2017 மே மாதம் ‘பிரிண்ட் ஆன் டிமான்ட்’
என்கிற வசதி குறித்து திரு சிவகுமார் உரையாற்றினார். அதில் கலந்து கொண்ட பல
நண்பர்கள் புத்தகங்களை அவர்களே வெளியிட்டு பல சிரமங்களை அனுபவித்து இருந்ததாகத்
தெரியவந்தது. இந்த POD வசதி
அவர்களுக்கெல்லாம் உபயோகப்படும் என்று தோன்றியது. உடனடியாக வேறு யாரும் அந்த
முயற்சி செய்யாதபோது குவிகம் முயற்சியில் முதல் புத்தகம் ஜூலை 2007ல் வெளிவந்தது.
புத்தகக் காட்சியில் அழகியசிங்கர் அவர்களின் விருட்சம் அரங்கில் ஒரு முயற்சியும் செய்ய ஆரம்பித்தோம். அதுதான் புத்தகப் பரிமாற்றம். படித்ததைப் போட்டு, பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்னும் குவிகம் ‘bookXchange’.






