குவிகம்

கடந்து வந்த பாதை


 

     குவிகம் இணைய இதழ் 2013 நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ‘குவிகம்’  25 மின் பக்கங்களுடன் கதைகள், வழக்கமான கவிதைகள், கட்டுரைகள் தவிர, ஒலிவடிவங்கள், காணொளிகள் இடம் பெறும்    மின்னிதழாக விளங்குகிறது 


                            மின்னிதழ் படிக்க

  ‘வாசகசாலை’, ‘தமிழ்ப் புத்தக நண்பர்கள்’, ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ போன்ற அமைப்புகள் தொடங்கப்பட்ட காலகட்டமும் அதுதான் என்பது தற்செயல் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த ஐந்தாண்டுகளில் ‘கொரோனா’ காரணமாக நடத்தப்படாத மார்ச், ஏப்ரல் 2020 தவிர ஓவ்வொரு மாதமும் கூட்டம் நடந்திருக்கிறது. முதல் கூட்டத்தில் 40 நண்பர்கள் கலந்துகொண்டார்கள். சராசரி வருகை 25 தான். நிகழ்ச்சியைப் பொறுத்து கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும்.

கவியரங்கத்தில் ஆரம்பித்து, கலந்துரையாடல், நேர்காணல், சிறுகதைப் போட்டி, சிறப்புரைகள், விமர்சனக் கூட்டங்கள், புத்தக அறிமுகம் என்று வேறு வேறு வடிவங்களில் நிகழ்ச்சிகள் செய்து பார்த்திருக்கிறோம். முதலாம் ஆண்டு விழாவினை குழந்தைகளின் வில்லுப்பாட்டு, இந்திரா பார்த்தசாரதி மற்றும் அசோகமித்திரன் உரைகள்,கோமல் சுவாமிநாதன் எழுதிய மனித உறவுகள் நாடகம் ஆகிய மூன்று பகுதிகளைக்கொண்ட இயல் இசை நாடகம் நிகழ்வாக நடந்தது.

இயன்றவரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் பங்கேற்பவர்கள் ஆக இருக்க வேண்டும் என்பதும் ஒரு நோக்கம். “ஒரே வடிவமாக இல்லாமல் அடுத்த நிகழ்வு எந்த வடிவில் இருக்கப்போகிறது என்பது சஸ்பென்ஸ்” என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். அந்த சஸ்பென்ஸ் மற்ற நண்பர்களுக்கும் மட்டுமல்ல நடத்துகிற எங்களுக்கும் தான்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் குவிகம் இலக்கிய வாசலின் நிகழ்வுகள் இலக்கியச் சிந்தனை மாதாந்திர நிகழ்வுகளோடு சேர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இலக்கிய சிந்தனை சார்பில் ஒரு உரையும் அதைத் தொடர்ந்து, குவிகம் நடத்தும் நிகழ்வு என்று நடக்கின்றன சில மாதங்களில் இரண்டு அமைப்புகளும் சேர்ந்த ஒரே நிகழ்வாகவும் அவ்வப்போது நடைபெறுவது உண்டு.

2007 மே மாதம் ‘பிரிண்ட் ஆன் டிமான்ட்’ என்கிற வசதி குறித்து திரு சிவகுமார் உரையாற்றினார். அதில் கலந்து கொண்ட பல நண்பர்கள் புத்தகங்களை அவர்களே வெளியிட்டு பல சிரமங்களை அனுபவித்து இருந்ததாகத் தெரியவந்தது. இந்த POD வசதி அவர்களுக்கெல்லாம் உபயோகப்படும் என்று தோன்றியது. உடனடியாக வேறு யாரும் அந்த முயற்சி செய்யாதபோது குவிகம் முயற்சியில் முதல் புத்தகம் ஜூலை 2007ல் வெளிவந்தது. 


நண்பர்களுக்காகக் குறைந்த செலவில் குறைந்த நேரத்தில் புத்தகம் பதிப்பிக்கும் இந்தப் பணி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. விரைவில் தனது 50ஆவது புத்தகத்தை வெளியிட இருக்கிறது. 


   புத்தகக் காட்சியில் அழகியசிங்கர் அவர்களின் விருட்சம் அரங்கில் ஒரு முயற்சியும் செய்ய ஆரம்பித்தோம். அதுதான் புத்தகப் பரிமாற்றம். படித்ததைப் போட்டு, பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்னும் குவிகம் ‘bookXchange’.
       குவிகம் மற்றும் விருட்சம் நடத்தும் எல்லாக் கூட்டங்களிலும் இந்த புத்தகப் பரிமாற்றம் இடம்பெறுகிறது.2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை தியாகராய நகரில், தணிகாசலம் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் “குவிகம் இல்லம்” தொடங்கப்பட்டது. 
இல்லம்” தொடங்கப்பட்டது.
சிறிய அளவில் இலக்கிய நிகழ்வுகள் நடத்த அரங்கமும், புத்தகப் பரிமாற்றம் வசதியும், அமர்ந்து படித்துவிட்டுப் போகக்கூடிய ஒரு நூலகமும் கொண்டு இயங்குகிறது. ஆவணப் படங்கள், குறும் படங்கள் ஆகியவை பார்க்கவும் வசதி உள்ளது.மாதத்தில் மூன்று வாரங்கள் ஞாயிற்றுக்கிழமையன்று அளவளாவல் என்கிற ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடை நடைபெற்று வந்தது. நாளடைவில் இன்னும் இரு அமைப்புகள் இணைந்து கொண்டார்கள். இலக்கிய அமுதம் அமைப்பு மாதம் ஒரு நிகழ்வை நடத்துகிறது. ‘யவனிகா’ அமைப்பு ‘அரங்கம்’ என்கிற நாடகம் சம்பந்தப்பட்ட நிகழ்வினை மாதம் ஒருமுறை நடத்தி வருகிறது. மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு அளவளாவல் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. மேலும் ‘யவனிகா’, ‘கோமல் தியேட்டர்’ ஆகிய நாடகக் குழுக்கள் தங்களது ஒத்திகைகள் இல்லத்தில் நடத்திக் கொள்கிறார்கள்.


ஐந்தாவது ஆண்டு நிறைவுவினை சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்கிற எண்ணம் கொரானா பாதிப்பால் செயல்படுத்த இயலவில்லை. தவிர மார்ச் மாதம் முதல் நிகழ்வுகள் நடத்த முடியவில்லை. 

அதனால், 28.3.2020  தொடங்கி ஞாயிற்றுக்கிழமைகளில் இணையவழியாக அளவளாவல் நிகழ்வு நடத்தப்படுகின்றன. இணையவழி அளவளாவல் சிலவற்றின் இணைப்புகள் 


“மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்” என்னும் ஒலிநாடகம் தயாரிப்பில் உள்ளது. இயல்புநிலை திரும்புவதற்காகக் காத்திருக்கிறது

குவிகம் குறித்து ‘அமுதசுரபி’, மாம்பலம் டைம்ஸ், ‘ டி நகர் டாக்’ ஆகிய பத்திரிகைகளிலும், ‘தழல்’, ‘ராஜ் வெப் டிவி’ ஆகிய காணொளி ஊடகங்களிலும், ‘சிலிக்கான் ஷெல்ஃப்’, ‘ஸ்நாப்ஜட்ஜ்’ வலைப்பூக்களிலும் செய்திகள் வெளியீட்டுச் சிறப்பு செய்திருக்கிறார்கள்.

மின் இதழில் தொடங்கி, மாதாந்திரக் கூட்டங்கள் என்று தொடர்ந்து, குவிகம் பதிப்பகமும் உருவாகி, புத்தகப் பரிமாற்றம், குவிகம் இல்லம், இணையவழி அளவளாவல் என்று வேறுபட்ட செயல்பாடுகளுடன் மகிழ்ச்சியோடு இயங்கி வருகிறது.

இனிய நண்பர்களின் உறுதுணையோடு, நிறைய மகிழ்வுதரும் அனுபவங்களோடு  குவிகம் செயல்பட்டு வருவது மன நிறைவைத் தருகிறது.

                                                                      

7 comments:

 1. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் சிட்டி வேணூ

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள், தி.தமிழ்ச்செல்வன்

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நிகழ்ச்சி மிகவும் ந்னறாக நடைபெற்றிருக்கிறது மிகவும் மகிழ்ச்சி

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

  ReplyDelete
 6. இன்று யூடியூபில் திரு. இராமகிருக்ஷ்ணனின் இனிய உரை கேட்டேன். குவிகத்திற்கு வாழ்த்துக்களும் நன்றியும்

  ReplyDelete