குவிகம் இலக்கியவாசலின் 27வது நிகழ்வு, ஜூன் 17 அன்று அம்புஜம்மாள் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் பற்றி திருமதி லதா ரகு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்
“குவிகம் இலக்கிய வாசல் கூட்டம். பேசப்பட்டது தமிழ் அகராதியைப்பற்றி. பேசியவர் சந்தியா பதிப்பகம் திரு நடராஜன். கொட்டாவிகளுடன் வாயைத்திறந்தபடி சென்று அமர்ந்து, ஆச்சர்யப்பார்வையுடன் வாயைப்பிளந்தபடி வெளியில் வந்தேன். டவுட் வந்தால் மட்டுமே கையால் தொட்டுப்பார்க்கும் ஒரு டிக்ஷ்னரியின் பின்னால் இவ்வளவு விஷயங்கள் ஒளிந்திருக்க சாத்தியமா...? ஒரு துப்பறியும் கதை கணக்கில் இருந்தது பேச்சு.
சரி, நாம் அறிந்த தமிழுக்கு ,தமிழிலேயே அர்த்தம் எதற்காக? என்னிடம் உள்ளது ஆங்கிலம் தமிழ். இப்படி மொழி மாற்றி உபயோகப்படுத்தவே தேவை என்று தான் நினைத்திருந்தேன் இது நாள் வரையில்.
அவர் சொன்ன ஒரு சிறு உதாரணம். நாம் எப்போதும் சொல்வது பசும்பால்....அதாவது பசுவிடமிருந்து எடுக்கப்பட்ட பால். ஆனால் இந்த வார்த்தையின் அர்த்தம் பசுமையான பால் அதாவது fresh milk. ஆக எருமை பாலும் பசும் பால் தான். சரியாக பசும்பாலை சொல்லவது பசு பால் என்றே.
இதைப்போல் நிறைய,நிறைய மிக நிறைய.”
அவருக்கு நன்றி.
நிகழ்வில் கலந்துகொள்ள இயலாமல்
போனவர்களுக்காக உரையின் ஒலிவடிவம்
நிகழ்வில் கலந்துகொள்ள இயலாமல்
No comments:
Post a Comment